தல வெறியர்களால் வடிவமைக்கப்பட்ட அஜித்தின் சிலை..!

Last Updated: திங்கள், 14 ஜனவரி 2019 (08:47 IST)
ரசிகர்களின் கண் கண்ட கடவுளாக திகழ்பவர் நடிகர் அஜித் . தமிழ் சினிமாவின் உயர்ந்த நட்சத்திரங்களில் ஒருவரான இவரின் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் விஸ்வாசம் . அஜித்தின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. 


 
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான அஜித்திற்கு ரசிகர்கள் தங்கள் உயிரை பணய வைக்கவும் தயங்கியதில்லை.  இவருக்காக எதையும் செய்யும் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தை  கொண்டாடும் விதத்தில் அஜித்திற்கு 160 கிலோவில் கேக் சிலை வைத்துள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :