புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (15:59 IST)

தவறாக நடக்க முயன்றவனுக்கு காஜல் அகவர்வால் கொடுத்த வெகுமதி!

தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனை காளியாக மாறி துவம்சம் செய்துள்ளார்  காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக 10 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர் காஜல் அகர்வால். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகுந்த  பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இவர் தற்போது. கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது சினிமா அனுபவங்கள் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில், திருமணம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை, பிடித்த இளைஞரை சந்தித்தால் காதலித்து திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்வேன். நான் தைரியமான பெண், சில நேரம் காளிமாதிரி மாறி விடுவேன். 
 
ஒரு தடவை என் தோழியிடம் ஒருவன் தவறாக நடக்க முயன்றான். அவன் காலரை பிடித்து முகம் வீங்கி போகிற மாதிரி அடித்தேன். சினிமாவில் கசப்பான அனுபவம் இல்லை. படுக்கைக்கு அழைப்பது பற்றி சில கதாநாயகிகள் மீ டூ வில் பேசுகிறார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். ஆனால் எனக்கு அதுமாதிரி அனுபவம் ஏற்படவில்லை. என்றார்.