1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (15:32 IST)

பாக்ஸ் ஆஃபிஸ் ரெகார்ட்: சர்கார் சாதனையை அடிச்சு ஓரங்கட்டிய விஸ்வாசம்

பாக்ஸ் ஆஃபிசில் சர்கார் பட சாதனையை விஸ்வாசம் படம் முறியடித்திருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்தன. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
 
இந்நிலையில் விஸ்வாசம் படம் தமிழக பாக்ஸ் ஆஃபிஸ் ரெகார்ட்டில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 4வது இடத்தில் இருந்த சர்கார் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தில் மெர்சல், இரண்டாவது இடத்தில் 2.0, மூன்றாவது இடத்தில் பாகுபலி2 ஆகிய படங்கள் இருக்கிறது. இதனை வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.