1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (14:13 IST)

நடிகர் அஜித்துக்கு ஆலோசகர் பணி... ! அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு...

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அஜித். இவருக்கு கார் ரேஸ் மற்றும் ஆளில்லா விமானம் உருவாக்கும் பணி போன்றவற்றில் ஆர்வம் அதிகம். அதனால் இது சம்பந்தமான நிகழ்வுகளில் இவர் கலந்து கொண்டு மாணவர்களையும் ஊக்குவித்து வந்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் தக்‌ஷா என்ற மாணவர்கள் குழுவுடன் இணைந்து ஆளில்லா விமானம், உருவாக்குவதிலும் அஜித்  ஈடுபட்டார். 
 
மேலும் கடந்த 10 மாதங்களாக இக்குழுவுக்கு ஆலோசகர் மற்றும் ஆளில்லா விமானத்தை இயக்கும் விமானியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வரும் காலங்களிலும் நடிகர் அஜித் விரும்பினால் கௌரவ ஆலோசகராக பணியில் பணியாற்றலாம் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அஜித்தை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் உலகம் முழுதுவதிலிருந்தும் 55 நாடுகள் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டியில் பங்கேற்றன. இதில் அஜித் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த சென்னை அண்ணா பலகலைக்கழகத்தின் மாணவர் குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் 2 ஆம் இடம் பெற்றது.

மேலும் அண்மையில் சென்னையில் நடைபெற்ற  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் அஜித் குழுவினர் உருவாக்கிய ஏர்டாக்சி விமானம் காட்சிக்கு  வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.