விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

VM| Last Modified வெள்ளி, 7 டிசம்பர் 2018 (11:56 IST)
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை பல கோடி கொடுத்து சன்டிவி வாங்கியுள்ளது.


 
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, சிம்ரன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு போட்டியாக தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது, இதில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
 
இந்நிலையில் விஸ்வாசம் படத்தை தொலைக்காட்சியில் வெளியிடும் உரிமையை இதுவரை இல்லாத அளவுக்கு பல கோடி கொடுத்து சன்டிவி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எத்தனை கோடி என்ற தகவல் தெரியவில்லை. பேட்ட, விஸ்வாசம் இரண்டுமே வரும் ஆண்டின் டாப் இரண்டு படங்கள். இந்த இரண்டு படமுமே சன்டிவி கைப்பற்றியுள்ளதால் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :