அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்... முதல் படமும் சிவகார்த்திகேயனுக்கு இதுதான்... வெளிவராத தகவல்.
அஜித் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். இவருடன் நடிப்பது என்பது பலருக்கும் இன்று வரை கனவு. அவருடன் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்று துடிப்போர் எண்ணிக்கை கோடியை தாண்டும்.
இன்றைய இளம் நடிகர்களில் பலருக்கு ரோல் மாடல் அஜித் தான். நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அஜித் தான் ரோல் மாடல். அவரைப்போல் முன்னேற வேண்டும் என்று சினிமாவில் உழைத்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்ததை நாம் பாத்திருப்போம். ஆனால் சிவகார்த்திகேயன் முதல்முதலாக திரையில் தோன்றிய படம் "ஏகன்" தான், அது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அப்போது அஜித் சாரிடம் ஒரு புகைப்படம் கூட சிவகார்த்திகேயன் எடுத்தது இல்லையாம், அது நினைத்து பல முறை வருத்தப்பட்டுள்ளார்.
தற்போது விஸ்வாசம் படத்தின் புகைப்பட கலைஞராக உள்ள சிற்றரசு ஒரு பேட்டியில் அந்த புகைப்படத்தை காட்டியுள்ளார்,