கிரிக்கெட்டை விடாத விஷ்ணுவிஷால் – தமிழில் ரீமேக் ஆகிறது ஜெர்ஸி !

Last Modified வியாழன், 18 ஜூலை 2019 (09:29 IST)
இந்த ஆண்டு வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமான ஜெர்ஸி தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

ஸ்மோர்ட்ஸ் சினிமா எனும் ஜானருக்கு வணிக சினிமாவில் எப்போதுமே ஏகோபித்த வரவேற்பு உண்டு. அதற்கு சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஜெர்ஸி மற்றும் கனா போன்ற படங்களே எடுத்துக்காட்டு. நானி நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவானப் படமான ஜெர்ஸி ஆந்திரா மட்டுமல்லாமல் சென்னையிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

36 வயது என்பது கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான வயது. அந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடும் ஒரு கிரிக்கெட் வீரனின் கதையே ஜெர்ஸி. இந்தப்படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார். இவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் இந்தப்படத்தில் நடிக்க இவரைத் தேர்வு செய்துள்ளனர். விஷ்ணு விஷால் ஏற்கனவே ஜீவா எனும் கிரிக்கெட் மையப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரீமேக் உரிமையை ராணா டகுபதி பெற்றுள்ளதோடு தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.இதில் மேலும் படிக்கவும் :