கவர்ச்சி பிடிக்காது...காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா ?சமந்தா மாமாவுக்கு கேள்வி !

nagarjuna
Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (18:42 IST)
தமிழகத்தில் மட்டுமல்ல தெலுங்கிலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி கலைகட்டி உள்ளது. ஆனால் அங்கு பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். தற்போது நடக்க இருக்கும் 3வது சீசனை நாகர்ஜூனா தான் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் வெளியானது. ரசிகர்களும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் தற்பொழுது நாகார்ஜூனா இந்த தகவலை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி எதுவும் என்னிடம் கேட்காதீர்கள்.  எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பிடிக்கவில்லை. முக்கியமாக அந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள்.அதனால் பிக் பாஸ் எனக்குப் சுத்தமாகப் பிடிக்காது என்று கூறினார். ஆனால் இதற்கு முன்னர் ஒரு பேட்டியில் அவர் பிக்பாஸ் பற்றி விளம்பரம் செய்யும் விதத்தில் பேசி இருந்தார்.
 
அதற்கு தான் தற்போது ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.குறிப்பாக தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியை கவர்ச்சி என்று கூறும் நீங்கள் சில் நாட்களுக்கு முன்னர் மன்மதுடு 2 டீஸரில் மகள் வயது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சரியா என்று கேட்டு டுவிட்டரில் கேள்வி கேட்டு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :