செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 7 மே 2020 (17:47 IST)

My cutie... உன்னை எப்போ பார்க்கபோறேனோ...? ஏக்கத்தில் விஷ்ணு விஷால் பதிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துகொண்டனர்.

இதையடுத்து கேரியரில் அதீத கவனத்துடன் இருந்த வந்த விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை தற்ப்போது காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். ஆனால், தன் மகன் மீது விஷ்ணு விஷாலுக்கு அலாதி பிரியம் வைத்துள்ளார். அதன் வெளிப்பாடாக தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகன் ஆர்யன் உடன் இருக்கும் அழகிய போட்டோவை வெளியிட்டு "  க்யூட்டி.. எப்போது உன்னை பார்க்க போகிறேன்..? என்று பதிவு செய்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My cutie... When am i going to meet you?

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on