மனைவியுடன் இருந்தபோதே ஜுவாலா கட்டாவுடன் தொடர்பா...? உண்மையை உடைத்த விஷ்ணு விஷால்

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:51 IST)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துகொண்டனர்.

பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் தோழி என கூறி நெருக்கமாக பழகி வந்த அவர்கள் பின்னர் காதலிக்க துவங்கினர். விரைவில் இருவரும் மறுமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் தனது வாழ்வின் இருண்ட காலங்களை குறித்தும் வரப்போகும் புது மனைவியை குறித்தும் பேசியுள்ள அவர்,
ஜூவாலா கட்டாவால் தான் என் மனைவியை பிரிந்ததாக சிலர் சமூகவலைதளங்களில் கூறினார்கள். மேலும் ராட்சசன் படத்தின் போது அமலா பாலை காதலிக்கிறேன் என கூறினார்கள். ஆனால், அது வெறும் வதந்தி...


என் மனைவியை பிரிந்த பிறகு தான் நான் ஜுவாலாவை சந்தித்தேன். நேர்மறை எண்ணம் கொண்ட அவரது வாழ்விலும் பிரிவை சந்தித்துள்ளார். எனவே எங்கள் இருவரது மனம் ஒத்துப்போனது நாங்கள் இருவரும் மனம்விட்டு நிறைய பேசியுள்ளோம். எங்களது உறவு நல்ல முறையில் தான் இருக்கிறது. பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று. என கூறியுள்ளார். விஷ்ணு விஷாலுக்கு இந்த வாழ்க்கை அவர் நினைத்த படியே சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள்..


இதில் மேலும் படிக்கவும் :