வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (20:04 IST)

அமலா பால் வெளியிட்ட போட்டோவில் பழைய நினைவுகளை பகிர்ந்த விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்த அமலா பாலுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

ஆனால், தங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து தற்போது காதலி ஜுவாலா காட்டாவை காதல் திருமணம் செய்யவுள்ளார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் அமலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு  கமெண்ட்ஸ் செய்துள்ள விஷ்ணு விஷால் 'ராட்சசன்' படத்தில் நடித்தபோது அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு "உங்கள் வேலையில் நீங்கள் சிறந்தவர். எனவே தொடர்ந்து வேலை செய்யுங்கள், நீங்கள் சுதந்திரத்தை உணருவீர்கள் என கூறியுள்ளார்.