1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:48 IST)

"மோகன்தாஸ்" டீசர் எப்படி உருவாச்சு தெரியுமா...? மேக்கிங் ரகசியத்தை சொன்ன விஷால்!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், நேற்று இன்று நாளை , ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து  கதாநாயகர்கள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

இதையடுத்து தற்போது FIR என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதற்குள்ளாகவே தனது அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துவிட்டார். ஆம், விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் "மோகன்தாஸ்" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் வெறித்தனமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ள விஷ்ணுவிஷாலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "மோகன்தாஸ் படத்தின் டீசர் கொரோனா ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னதாவே உருவாக்கினோம். ஒரு சில  நபர்களை மட்டுமே வைத்து எங்களது சொந்த அலுவலகத்தில் இதற்கான வேலைகளை செய்தோம். மேலும், அரசாங்கம் அறிவித்தபடியே "ஒருவருக்கொருவர் சமூக விலகலை கடைபிடித்திருந்தோம் என கூறி பதிவிட்டுள்ளார்.