கணவர் விஷ்ணுவிஷாலுக்கு ஜூவாலா கொடுத்த முத்தம்: புகைப்படம் வைரல்!
கணவர் விஷ்ணுவிஷாலுக்கு ஜூவாலா கொடுத்த முத்தம்: புகைப்படம் வைரல்!
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா சமீபத்தில் தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. விஷ்ணு விஷால் முதலில் ரஜனி என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பதும் அவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து இருந்த ஜூவாலா கட்டா, கடந்த சில மாதங்களுக்கு முன் விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொண்டார்
இந்த நிலையில் விஷ்ணு விஷால்-ஜூவாலா கட்டா திருமணம் முடிந்து சில மாதத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சற்று முன் ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷாலின் கன்னத்தில் அழுத்தமாக ஜூவாலா முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கிலும் லைக்ஸ்களும் நூற்றுக்கணக்கில் கமெண்ட்ஸ்களும் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.