செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:30 IST)

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா திருமணம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தற்போது விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது  சமூக வலைதளங்களில் தங்கள் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இப்போது அவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இப்போது அவர்களின் திருமணம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.