1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 8 மே 2021 (16:48 IST)

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை டுவிட் பதிவு செய்த பிரபல நடிகர்!

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் கட்சி 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு திரையுலகினர் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு திரையுலக கலைஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் உதயநிதிக்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விடிவெள்ளி தான் முளைக்கும் வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா, கிழக்கு முகம் வெளுத்ததனால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு