செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (15:08 IST)

உடல் நலக் குறைவால் நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விஷால் தீவிர தலைவலி காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவன் இவன் படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் சமீபத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்தபோது, விஷாலுக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. 
இந்நிலையில் டெல்லியில் சண்டைகோழி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, விஷாலுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக விஷால் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷால் விரைவில் குணமடைய அவரது குடும்பத்தாரும் அவரது ரசிகர்களும் இறைவனிடம் வேண்டி வருகின்றனர்.