1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (17:03 IST)

குடிநீருக்கு பதில் ஆசிட் கொடுத்த மருத்துவமனை ஊழியர்

பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியர் ஒருவர் நோயாளிக்கு மாத்திரை சாப்பிட குடிநீருக்கு பதில் ஆசிட் கொடுத்ததால் அந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

 
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள கோருல் கிராமத்தைச் சேர்ந்த சியாமளி தேவி என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கண் அறுவை கிசிக்கை செய்துக்கொண்டார். கடந்த புதன்கிழமை தேவி மாத்திரை சாப்பிட மருத்துவமனை பணியாளரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
 
அந்த மருத்துவமனை பணியாளர் தண்ணீர் என நினைத்து ஆசிட் பாட்டிலை கொடுத்துள்ளார். வாயில் மாத்திரையை போட்டு தேவியும் ஆசிட்டை குடித்துள்ளார். இதானால் துடித்து போன தேவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.