1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (13:09 IST)

ஜெயலலிதா வழக்கு: அப்பல்லோ மருத்துவமனைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கில் ரத்த மாதிரி கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
ஆனால் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அவரது மனுவை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டில்  உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில்  அம்ருதா மனு தாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் என்ன நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
 
இந்நிலையில் இன்று வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயலலிதாவின் ரத்த மாதிரி உள்ளதா என மார்ச் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.