மன்னிப்பு கேளுங்கள், ஜாதி பிரச்சனையாக மாற்றாதீர்கள்: PBSS பள்ளி விவகாரம் குறித்து விஷால்!
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்த நிலையில் சற்று முன் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பள்ளி சார்பில் இருந்து இப்போதாவது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் மன்னிப்பு கேளுங்கள் என்றும் இதை ஒரு ஜாதிப் பிரச்சனையாக மாற்றாதீர்கள் என்றும் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்.
குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்."
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.