திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (16:08 IST)

நயன்தாரா இஷ்டமில்லை என்று சொல்லும்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது: விஷால்

நயன்தாரா ஒரு திரைப்படத்தின் புரமோஷன்  நிகழ்ச்சியில் வர இஷ்டமில்லை என்று சொல்லும் போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் நயன்தாரா புரமோஷன்  நிகழ்ச்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 
 
நயன்தாரா தான் நடிக்கும் திரைப்படங்களின் புரமோஷன்  நிகழ்ச்சிகளுக்கு வர முடியாது என்று ஆரம்பத்திலேயே நிபந்தனை விதித்து விடுவார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த விஷால் ’நயன்தாரா அவர் நடிக்கும் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார், அது அவரது தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆக வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்த முடியாது. 
 
எனக்கு இஷ்டம் இல்லை என சொல்லும் போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதே நேரத்தில் வந்தால் நன்றாக இருக்கும். படத்தின் புரமோஷன்  நிகழ்ச்சிகளில் அதில்  நடித்த நடிகைகள் பங்கேற்பதில் தவறு இல்லை. என்று கூறியுள்ளார்
 
Edited by Siva