திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (07:57 IST)

நயன்தாரா பட ப்ரமோஷன்களில் கலந்துகொள்ளாதது குறித்து விஷால் கருத்து!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக நடிப்பது ஒரு பக்கம் என்றால், கதையின் மையக் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கும் படங்களுக்கும் ஒரு மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில் அவர் தான் நடிக்கும் எந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. ஆனால் அரிதாக அவர் கணவர் தயாரிக்கும் படத்தில் நடித்தால் மட்டும் அந்த பட ப்ரமோஷன்களில் கலந்துகொள்கிறார். இந்நிலையில் இப்போது நயன்தாரா பற்றி விஷால் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய விஷால் “நயன்தாரா படங்களின் ப்ரமோஷன்களில் கலந்துகொள்ளாதது அவரின் தனிப்பட்ட உரிமை. அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அவர் வந்தா நன்றாக இருக்கும்” என பூசி மெழுகினார்போல ஒரு பதிலைக் கூறியுள்ளார்.