1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:08 IST)

விஜய் கட்சியில் சேருவீர்களா? ரஜினி ஸ்டைலில் பதில் அளித்த விஷால்..!

விஜய் அரசியல் கட்சியில் சேர்வீர்களா என்ற கேள்விக்கு விஷால், ரஜினி ஸ்டைலில் பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தளபதி 68 படத்தை முடித்துவிட்டு 3 வருடங்கள் எந்த படத்தில் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் சமீபத்தில் விஷால் பேட்டி அளித்தபோது விஜய் அரசியல் கட்சி தொடங்கினால்  அந்த கட்சியில் நீங்கள் சேர்வீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு கடவுள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார் 
 
கடவுள் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை நான் செய்வேன் என்றும் எதிர்காலத்தில் எது நடந்தாலும் கடவுளின் அருள் தான் என்றும் கூறினார். அதே நேரத்தில் அரசியல் என்பது என்னை பொருத்தவரை ஒரு சமூக சேவை என்றும் அது ஒரு பிசினஸ் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva