ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (12:44 IST)

தமிழ் சினிமாவிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பதுண்டு: நடிகர் விஷால்

Vishal
நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கும் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில் தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கும் பழக்கம் உண்டு என்று நடிகர் விஷால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மலையாள திரை உலகில் அட்ஜஸ்மென்ட் என்ற பெயரில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ள நிலையில் இது குறித்து வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலும், நடிகைகள் சிலர் கொடுத்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் பிரபல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் மலையாள திரை உலகில் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வழக்கம் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது இல்லை என்று கூற முடியாது, காலம் காலமாக இந்த புகார்கள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் உப்புமா கம்பெனியினர் தான் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கின்றனர். நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை’ என்று கூறியுள்ளார். விஷாலின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran