திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (13:49 IST)

தமிழ் சினிமாவின் பொற்காலம் இந்த ஆகஸ்ட் மாதம்… இயக்குனர் ராம் மகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராமின் பேச்சு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “ஆகஸ்ட் 2024, என்பது தமிழ் சினிமாவின் பொற்காலம். இந்த மாத தொடக்கத்தில் ஜமா என்றொரு படம் வந்தது. அந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்கள்.

அதையடுத்து தங்கலான் வந்தது. அதன் பின்னர் கொட்டுக்காளி மற்றும் வாழை ஆகிய படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த நான்கு படங்களிலும் அனைவருமே மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள். இவர்களில் பலர் கோடம்பாக்கம் பக்கமே வந்தததே இல்லை. இந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவுக்கே, ஏன் இந்தியா சினிமாவுக்கே ஒரு மேஜிக்கல் தருணம்தான். தமிழ் சினிமா, இந்திய சினிமாவை விட மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.