வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (14:14 IST)

தமிழ் சினிமாவின் முதல் தன்வரலாற்றுப் படம் ‘வாழை’… வெற்றிமாறன் பாராட்டு!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் முதல் தன்வரலாற்று திரைப்படம் என்று பேசியுள்ளார். அதில் “ஒரு கலைஞன் தன் கதையைப் படமாக எடுப்பது என்பது உலகத்தின் முன்னை தன்னை வைப்பது. அதுமட்டுமில்லாமல் தன்னையேக் கொஞ்சம் விலகி நின்று பார்ப்பது.

இதுதான் மாரி செல்வராஜின் சிறந்த படம் என்று சொல்லமாட்டேன். அவரின் சிறந்த படம் அடுத்து எடுக்கவிருக்கும் படம்தான். எந்தவொரு கலைஞருக்குமே அவரின் சிறந்த படம் அடுத்து எடுக்க விருக்கும் படம்தான். வாழை தமிழ் சினிமாவின் முக்கியமானப் படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.