வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:50 IST)

முதல் முறையாக கான்ஸ்டபிள் வேடத்தில் விஷால்… லத்தி சார்ஜ் அப்டேட்!

விஷால் நடிக்கும் லத்தி சார்ஜ் படத்தில் அவர் ஒரு கான்ஸ்டபிளாக நடிக்க உள்ளாராம்.

விஷால் மற்றும் சுனைனா இணைந்து நடித்து வரும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ’லத்தி சார்ஜ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மாஸ் ஆக இருப்பதாக விஷால் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஷால் ஒரு கான்ஸ்டபிளாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் அவர் அந்த குழந்தையை காப்பாற்ற சென்று மீட்டுவருவதுதான் கதையாம்.