திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (17:34 IST)

விஷாலின் ‘லத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

lathi
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ஆகஸ்ட் 11-ஆம் தேதி விக்ரம் நடித்த ’கோப்ரா’ படம் ரிலீஸாக உள்ள நிலையில் விக்ரம் படத்துடன் மோத விஷால் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்