சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (17:51 IST)

விஷாலின் ‘லத்தி’ படத்தின் அடுத்தகட்ட பணி இன்று முதல் ஆரம்பம்!

lathi
விஷாலின் ‘லத்தி’ படத்தின் அடுத்தகட்ட பணி இன்று முதல் ஆரம்பம்!
விஷால் நடித்து வரும் ‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணி இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 விஷால் நடிப்பில் அவரது நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா, ரமணா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லத்தி’ 
 
இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பூஜையும் இன்று நடைபெற்றது.
 
விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஷால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது