1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:52 IST)

விஷாலின் ‘லத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

lathi firstlook
விஷாலின் ‘லத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
விஷால் நடித்து வரும் ‘லத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த படத்தின் நான்கு மொழி பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்  
 
விஷால் ஜோடியாக சுனைனா நடித்திருக்கும் இந்த படத்தை வினோத் குமார் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
நடிகர்கள் மற்றும் ராணா, நந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர் என்பதும் இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது