வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:11 IST)

ஓடிடி வலையில் வீழ்ந்த விஷாலின் ‘சக்ரா’: இத்தனை கோடி வியாபாரமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.
 
முதல் முதலாக மாஸ் நடிகரான சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படம் கூட ஓடிடியில் தான் ரிலீசாக உள்ளதாக செய்தி வெளியானதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் திரையரங்குகள் திறப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று கூறியதை அடுத்து மேலும் பல திரைப்படங்கள் ஒடிடி பக்கம் சென்று வருகின்றன
 
அந்த வகையில் தற்போது விஷாலின் ’சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரூபாய் 45 கோடி விஷால் கேட்டதாகவும் ஆனால் அமேசான் நிறுவனம் ரூபாய் 33 கோடி வரை கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் இதனையடுத்து ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது 
 
தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தில்விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்