1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 8 ஜூன் 2016 (10:29 IST)

விஷால் மன்னிப்பு கேட்கவில்லை எனில் அவரது உருவப் பொம்மையை கொளுத்துவோம்

விஷால் மன்னிப்பு கேட்கவில்லை எனில் அவரது உருவப் பொம்மையை கொளுத்துவோம்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை ஆதரித்து சமீபத்தில் பேசினார் நடிகர் விஷால். அதற்கு தமிழர் வீர விளையாட்டு மீட்புக்குழு சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


 
 
"விலங்குகள் நல அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் வசித்துக் கொண்டு, தமிழ்ப் படங்களில் நடித்துச் சம்பாதிக்கும் விஷால், தமிழ்க் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தக் கருத்தைக் கூறியது, தமிழ்ச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல். அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில், விஷாலின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நடத்துவோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
விஷால் மன்னிப்பு கேட்கவில்லை எனில் முதல்கட்டமாக அவரது உருவப் பொம்மையை எரிப்போம் என தமிழர் வீர விளையாட்டு மீட்புக்குழு நிர்வாகி கூறினார்.