வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (15:58 IST)

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

200 கிலோமீட்டர் வேகத்தில் அஜித் காரை ஓட்டி சென்ற வீடியோவை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் கடந்த 21ஆம் தேதி அவர் துபாயில் நடந்த கார் ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் 200 கிலோமீட்டருக்கும் மேலான வேகத்தில் கார் ஓட்டிய காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்து அஜித் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

மேலும் 6 நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் அஜித் பல்வேறு நேரங்களில் வேகமாக கார் ஓட்டும் காட்சிகள் உள்ளதை அடுத்து ஒரு நிஜ திரைப்படத்தில் இருக்கும் காட்சிகளை போல் அந்த காட்சிகள் இருப்பதாக அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran