‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தை வெளியிடும் மிஷ்கின் தயாரிப்பாளர்
‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளார் மிஷ்கின் படத்தின் தயாரிப்பாளர்.
சுதர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடிப் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. ‘கயல்’ சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். ஐ.டி.யில் வேலை பார்க்கும் இளைஞனாக அவர் நடித்துள்ள இந்தப் படத்தில், லோக்கல் ரவுடியாக நடித்துள்ளார் பார்த்திபன்.
ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளார் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர். ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’, ‘நட்புனா என்னானு தெரியுமா?’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள இவர், மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்க உள்ள படத்தைத் தயாரிக்கிறார்.