வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (13:42 IST)

சமந்தா படத்திற்கு விஷால் வைத்த ஆப்பு

கடந்த ஒரு மாதமாக புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக நிலையில் கடந்த வாரம் வெளியான சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வெகுநாட்களுக்கு பின் கல்லா நிரம்பியது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கேட்டு கொண்டதற்கு இணங்க, தெலுங்கு திரைப்படங்கள் எதுவும் ஏப்ரல் 8-ம்தேதி ஞாயிறு முதல் தமிழ் நாட்டில் வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே ரிலீசாகி தமிழகத்தில் வெற்றி நடை போட்டு வரும் சமந்தாவின் ‘ரங்கஸ்தலா’ திரைப்படமும் ஞாயிறு முதல் திரையரங்குகளில் இருந்து தூக்கப்படும் என்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 'ரங்கஸ்தலம்' படக்குழுவினர் மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் விஷாலுடன் சமந்தா 'இரும்புத்திரை' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.