1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (16:46 IST)

கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் படம் தாமதமாக என்ன காரணம் தெரியுமா?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் தாமதமாக என்ன காரணம் எனத் தெரியவந்துள்ளது. 
‘இறைவி’ படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து ஒரு படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக இருந்தது. ஆனால், முதலில் கால்ஷீட் தராமல் இழுத்தடித்த  தனுஷ், ஒரு வருடத்துக்குப் பிறகு கால்ஷீட் தர முன்வந்தார். ஆனால், அப்படியும் படம் தொடங்குவது தாமதமாக, தற்போது ரஜினி படத்தை இயக்குவதில் மும்முரமாகி விட்டார் கார்த்திக் சுப்பராஜ்.
 
தனுஷ் படம் தொடங்க தாமதம் ஏன்? இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. ஹாலிவுட் நடிகர் ஒருவர் இதில்  நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும். எனவே, அல் பசீனோ, ராபர்ட் டினேரோ ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால்,  அவர்களைத் தொடர்பு கொள்வதே சிரமமான காரியமாக இருக்கிறதாம்.
 
எனவே, ஹாலிவுட் நடிகர் கமிட்டானாதால் தான் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குமாம். ரஜினி படத்தை முடிப்பதற்குள் எப்படியாவது ஹாலிவுட் நடிகரை  கமிட் பண்ணி, அடுத்து தனுஷை இயக்குவது என்ற முடிவில் இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.