வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:49 IST)

விஷாலுக்கு நிச்சயிக்க பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம்!

நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை ஒருவருக்கும் நடக்க இருந்த திருமணம் நின்றதற்கு ஒரு நடிகைதான் காரணம் என சொல்லப்படுகிறது.

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து வருகிற சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இரு குடும்பத்தாரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால் திட்டமிட்ட படி திருமணம் நடக்கவில்லை. இதனால் அந்த திருமணம் கைவிடப்பட்டதாக சொலல்ப்பட்டது.

இந்நிலையில் இந்த திருமணம் நின்றது ஏன் என்பது குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் விஷாலோடு இரண்டு படங்களில் நடித்த ஒரு நடிகைக்கும் விஷாலுக்கும் இடையே நிச்சயதார்த்ததுக்குப் பின்னரும் காதல் இருந்ததால்தான் அனிஷா திருமணத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனிஷா ரெட்டிக்கு இப்போது வேறு ஒரு தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம். இது கோலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.