1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (18:00 IST)

விஷால்-ஆர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே 
 
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதும் விஷால் ஜோடியாக மிருணாளினி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்க இருப்பதாக கூறப்பட்டாலும் இதனை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டிலை ஆர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் இணைந்து தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ’எனிமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஷாலும் ஆர்யாவும் உண்மையில் உயிர் நண்பர்களாக இருக்கும் நிலையில் படத்தில் எதிரிகளாக நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படம் இருவருக்குமே ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
விஷால்-ஆர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு!