வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2020 (21:52 IST)

விஷாலின் ‘எனிமி’யில் இணைந்த பிரபல நடிகர்!

விஷாலின் ‘எனிமி’யில் இணைந்த பிரபல நடிகர்!
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார் என்ற செய்தி இணைய ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் எனிமி என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை விஷால் ஆர்யா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர் என்பதும் இந்த டைட்டில் போஸ்டருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார் 
 
ஏற்கனவே இந்த படத்தில் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து வரும் நிலையில் பிரகாஷ்ராஜுக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர் என்பது ரகசியமாக படக்குழுவினர்கள் வைக்கப்பட்டு உள்ளது 
 
இன்னும் இரண்டு நாட்களில் எனிமி படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது