வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (18:06 IST)

தேர்தலை விட்டு விலகும் விஷால் ! – அதிரடி அறிவிப்பு

மீண்டும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தான் போட்டியிடுவது சந்தேகமே என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று விஷால் பொருப்பை ஏற்ற நிலையில் திடீரென தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒரு தனி அதிகாரியை நியமனம் செய்து, இனிமேல் சங்கத்தின் அனைத்து முடிவுகளையும் தனி அதிகாரியே முடிவு செய்வார் என அறிவித்தது. இதனை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக விஷால் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் சரியான பதில் கொடுக்கவில்லை என்பதே என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் மீண்டும் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் போட்டியிடுவது சந்தேகமே என கூறியிருக்கிறார். ஏற்கனவே விரைவில் நடக்க இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷால் போட்டியிடமாட்டார் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.