1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (11:34 IST)

அயோக்யாவின் சாதனை: விஷால் கேரியலில் டர்னிங் பாய்ண்ட்!!!!

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் அயோக்யா படத்தின் டிரைலர் வெளியாகி சாதனை படைத்துள்ளது.
 
விஷால், ராஷிகண்ணா நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கியிருக்கும் படம் தான் 'அயோக்யா. ‘விக்ரம் வேதா’ மூலம் புகழ்பெற்ற சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் இப்படத்தின் டீசரும் கடந்த 19ந் தேதி வெளியாகி ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வரும் மே 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
 
இந்நிலையில் விஷால் சினிமா கேரியரிலேயே அயோக்யா படத்தின் ட்ரைலர் 65 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் தற்போது வரை அயோக்யா டிரைலர் யூ டியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.