செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:09 IST)

முதன்முறையாக இரண்டாம் பாகம் எடுக்கும் மிஸ்கின்! கொண்டாட்டத்தில் விஷால்!

தமிழ் சினிமாவில் விசித்திரமான கதைகளை படமாக்கும் தனித்துவமான இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் மிஷ்கினுக்கு ஒரு தனி இடமுண்டு. 


 
படங்களை இப்படி கூட எடுக்கலாம் என வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு கற்று தந்த பாடம் தான் "சித்திரம்பேசுதடி" இந்த படம் காலத்திற்கும் மிஷ்கினின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் அதை தொடர்ந்து அஞ்சாதே,  நந்தலாலா,  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , பிசாசு என இவர் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவில் இருந்து சற்று வித்தியாசமாகவே காணப்பட்டது. 
 
இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியிருந்தார். துப்பறிவதை களமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லராக அமைந்த இப்படத்தில் விஷாலுடன் வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் மிஷ்கின் - விஷால் கூட்டணியில்  இரண்டாண்டுகள் கழித்து   இதன் இரண்டாம் பாகம் இயக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. 
 
நடிகர் விஷால் தற்போது இயக்குநர் சுந்தர் சி-யின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கப்படோசியாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் ஸ்பாட்டிற்கே சென்ற  மிஷ்கின், விஷாலையும் சுந்தர் சி-யையும் சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. 


 
கூடிய விரைவில் துப்பறிவாளன் 2 பற்றிய மற்ற விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.