செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (19:50 IST)

அனுஷ்காவின் ‘சைலன்ஸ்’ பட டிரைலரை வெளியிடும் பிரபல நடிகர்!

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடித்த 'நிசப்தம்' திரைப்படம் ஓடிடியில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை மதியம் ஒரு மணிக்கு ’நிசப்தம்’ படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது
 
இந்த ட்ரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார். நிசப்தம் வெளியாகும் அதே தினத்தில் தான் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதும் தனக்கு போட்டியாக ரிலீஸாகும் படத்தின் டிரைலரை அவர் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பிரமோஷன் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் தன் திரைப் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது