'தெறி', 'கபாலி', சிங்கம் 3' வரிசையில் இணைந்தது 'விஐபி 2'


sivalingam| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (22:59 IST)
தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய விஐபி 2 திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.


 
 
இந்த நிலையில் இந்த படத்தின் உலகளாவிய வியாபாரம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று மலேசிய ரிலீஸ் உரிமையை ரூ.3 கோடிக்கு எம்.ஜி முறையில் 'மாலிக் ஸ்ட்ரீம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
 
இதே நிறுவனம் தான் விஜய்யின் தெறி, ரஜினியின் கபாலி, சூர்யாவின் எஸ்3 ஆகிய படங்களை மலேசியாவில் ரிலீஸ் செய்து மிகபெரிய லாபத்தை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :