1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (15:03 IST)

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் கன்பார்ம்! விஜய் சேதுபதி வேடத்தில் நடிப்பது இவரா?

இன்றைய இளம் இயக்குனர்கள் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.



தமிழ் சினிமாவில் பெரும் மாற்றங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்படித்தான் கதை இருக்கும் இப்படித்தான் படம் இருக்கும் என்ற சிந்தனைகளையும் எண்ணங்களையும் தகர்த்துவிட்டனர் இன்றைய இளம் இயக்குனர்கள்.
 
தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முக்கியமான இயக்குனர்கள்  புஷ்கர்-காயத்ரி. இவர்கள் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படத்தை யாராலும் மறக்க முடியாது.
 
விறுவிறுப்பான கதை, தாறுமாறான இசை , ஒவ்வொரு பிரேமிலும் சொல்லப்பட்ட கதை, இரண்டு மாஸ் நடிகர்களின் அசத்தல் நடிப்பு என அசாத்தியமான அசத்தல் படமாக விக்ரம் வேதா   இருந்தது.
 
இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக நீண்ட நாட்களாக சொல்லி வந்தார்கள்., அதுகுறித்து இப்போது அப்டேட் என்னவென்றால் விஜய் சேதுபதி கேரக்டரில் பாலிவுட் ஹாட் நாயகன் ஷாருக்கான் நடிக்க இருக்கிறாராம்.