படமா இது? சீதக்காதியாய் ஏமாற்றிய விஜய் சேதுபதி

Last Updated: வியாழன், 20 டிசம்பர் 2018 (21:37 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் சீதக்காதி. சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25 வது திரைப்படம். 25 வது திரைப்படத்திற்கான நியாத்தை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செய்துள்ளாரா? 
 
பழம்பெரும் நாடக நடிகரான அய்யாவை சினிமாவில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் பிடிவாதத்துடன்தான் சினிமாவில் நடிக்க முடியாது என்று அய்யா மறுத்துவிடுகிறார். 
 
இந்நிலையில் திடீரென அய்யா நாடகம் நடித்து கொண்டிருந்தபோதே இறந்துவிடுகிறார். ஆனால் இவர் இறந்த பின்னர் ஒருசில அதிசயங்கள் நடக்கின்றன, அந்த அதிசயத்தால் பல பிரச்சனைகளும் தீர்ந்துவிடுகின்றது. இதுதான் படத்தின் கதை. 
 
வழக்கமாக விஜய்சேதுபதி படம் என்றாலே அவரது தனித்துவமான நடிப்பு வெளிப்படும். ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் ஏமாற்றம். விஜய் சேதுபதி நன்றாக நடித்தும், முகத்தை மூடிய மேக்கப்பால் நடிப்பு வெளியே தெரியவில்லை.
விஜய் சேதுபதி வரும் முதல் 40 நிமிட காட்சிகள் மிக மெதுவாக இருப்பதுடன் கொஞ்சம் போரடிக்கவும் செய்கிறது. படத்தை பார்த்த பலருக்கும் இது ஒரு படத்திற்கான உணர்வை தரவில்லை மாறாக நாடத்தின் உணர்வையே தந்துள்ளது என்பது தெரிவிக்கப்பட்டு வரும் கருத்து. 
 
விஜய் சேதுபதி சீதக்காதி படத்திற்கு நியாயம் செய்துள்ளார். ஆனால், சீதக்காதியாக ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். ஆக மொத்தம் படம் சூப்பர். ஆனால், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.


இதில் மேலும் படிக்கவும் :