செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (11:03 IST)

விஜய் சேதுபதியின் "மாமனிதன்" சுவாரஸ்ய தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் "மாமனிதன்" படம் பற்றிய சுவாரஸ்யமான செய்தி வெளிவந்துள்ளது.


 
வொய்.எஸ்.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படமான "மாமனிதன்" பூஜையுடன் துவங்கியது. படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார்.
 
படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். இசையமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லைகுறிப்பிடத்தகுந்த தகவல். மைனா, பைரவா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாராம். மேலும் ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார். இஸ்லாமிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியது. அதில் இயக்குனர் சீனுராமசாமியும் அருகில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக காக்கி சட்டையுடன் காணப்படுகிறார்.