செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (09:10 IST)

விக்ரம் படத்தில் எத்தனை பாடல்கள்…வெளியான அப்டேட்!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸூக்கு தயாராகி வருகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது தடைபட்டு நடந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இப்போது ரிலிஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் மார்ச் 18 ஆம் தேதி ரிலிஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் முன்று பாடல்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் இரண்டு பாடல்கள் மாண்டேஜ்களாகவும், ஒரு பாடல் நடனத்தோடு கூடிய பாடலாகவும்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர படத்தில் சில தீம் இசைத்துணுக்குகள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.