1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (16:23 IST)

முடிந்ததா விக்ரம் படப்பிடிப்பு… இணையத்தில் வெளியான புகைப்படம் வைரல்!

கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வந்தது. அங்கு க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளை படமாக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். அதை முடித்துவிட்டு விரைவில் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் இப்போது விக்ரம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.