புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (08:43 IST)

உலக திரைப்படங்களில் இப்படி ஒரு சாதனையை எந்த படமும் செய்ததில்லை!

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. 
 
இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கேஜிஎஃப் 2 டீசர் இதுவரை 200 மில்லியன் பார்வைகளையும்,  8 மில்லியன் லைக்ஸ்களையும்,  1 மில்லியன் கமெண்ட்ஸ்களையும், கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.  உலகில் இதுவரை வெளியான படங்களில் 8 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்த முதல் டீசர் என்ற பெருமை ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு கிடைத்துள்ளது. இதனை இயக்குனர் பிரசாந்த் நீல் அவரது ட்விட்டர் பக்கத்தில் பெருமையோடு பகிர்ந்திருக்கிறார்.