1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:52 IST)

நடிகர் விக்ரம் பிரபு சொன்ன ஒரு கமெண்ட்…. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

நடிகர் விக்ரம் பிரபு லாக்டவுன் காலத்துக்குப் பின்னர் நடிப்பே மறந்துவிட்டது எனக் கூறியது கேலிக்குள்ளாகி வருகிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தை  தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் சன் நெக்ஸ்ட் தளம் மற்றும் சன் டிவியில் நேரடியாக பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டது. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானதால் அதிகளவில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் அதே சன் தொலைக்காட்சியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தைவிட அதிக டி ஆர் பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது புலிக்குத்தி பாண்டி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு இப்போது சொன்ன ஒரு கமெண்ட் கேலிக்குள்ளாகி வருகிறது. இந்த படம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் பிரபு ‘லாக்டவுன் காலத்துக்கு பிறகு நடிப்பே மறந்துவிட்டது’ எனக் கூற, ’அதற்கு முன்னால் மட்டும் உங்களுக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரியுமா?’ எனப் பலரும் கேலி செய்தும் மீம்ஸ் போட்டும் வருகின்றனர். விக்ரம் பிரபுவுக்கு முகத்தில் பாவனைகளேக் கொண்டுவர தெரியாது என்ற விமர்சனம் நீண்ட நாட்களாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.